வீடு திரும்பினார் ஷாருக்கான்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிவூட் நடிகர் ஷாருக்கான் வீடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடிகர் ஷாருக்கான் சிகிச்சைகளின் பின்னர் நேற்றிரவு வியாழக்கிழமை வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

”வெப்ப வாதத்தால்” பாதிக்கப்பட்ட நடிகர் ஷாருக்கான் நேற்று முன்தினம் அஹமதாபாத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போதே அவர் “வெப்ப வாதத்தால்” பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்