
விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் மேதின கூட்டம்
-பதுளை நிருபர்-
விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் மேதின கூட்டம் பதுளை கந்தேகெதர சாரணியா இந்து கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
விவசாய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எம் கிருஷ்ண சாமி தலைமையில் இடம்பெற்றதுடன் விஷேட அதிதியாக சட்டத்தரணியும் தொழிற்சங்க ஆலோசகருமான எஸ்.சத்தியமூர்த்தி கலந்து கொண்டதுடன் பெருந்திரளான தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் சிறிது தூரம் பதாதைகளை ஏந்தியவாறு நடைபவணியாக வந்து கந்தேகெதர சாரணியா இந்து கலாசார மண்டபத்தில் மேதின கூட்டம் இடம்பெற்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
