விளையாட்டுத் துறையில் பெண்களின் தோற்றம் மற்றும் உடல் அமைப்பு குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, பல்வேறு பெண் விளையாட்டு வீராங்கனைகள் தங்களது சாதனைகள் மற்றும் திறமைகள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பெண் வீராங்கனைகளின் உடல் தோற்றத்தை மையமாகக் கொண்டு சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துகள், அவர்களின் விளையாட்டுத் திறமையை மறைக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில், பல வீராங்கனைகள் தங்களது வலிமை, உடல் திறன் மற்றும் விளையாட்டு சாதனைகளையே முன்னிறுத்தி வருகின்றனர்.
“பெண் விளையாட்டு வீராங்கனைகள் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்ற ஒரே மாதிரியான எதிர்பார்ப்புகளை நிராகரிக்கும் இந்தப் பிரசாரம், விளையாட்டில் பெண்களின் உடல் மற்றும் தோற்றம் குறித்து நிலவும் பார்வைகளை மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.









