விளக்கு ஒளிர்ந்த பின்னும் பயணித்த டிப்பர் : சமுர்த்தி வங்கி முகாமையாளர் படுகாயம்

-யாழ் நிருபர்-

யாழ். கோப்பாய் சந்தியில் வீதி சமிக்ஜை விளக்கு ஒளிர்ந்த பின்னும் கட்டுப்பாட்டை மீறி பயணித்த டிப்பர் மோதி சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த பெண் கோப்பாய் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளதால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.