விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தரமற்ற இனிப்பு பொருட்கள் பறிமுதல்

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள், புறக்கோட்டை, ஓல்கொட் மாவத்தையில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்திய போது, நுகர்வுக்கு பொருத்தமற்ற இனிப்பு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முறையான ஆவணங்கள் மற்றும் லேபிள் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட டொபி, சாக்லேட்டுகள் மற்றும் ஜெலி ஆகிய இனிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குழந்தைகள் உண்ணும் குறித்த இனிப்பு பண்டங்களில் காலாவதி திகதி, மூலப்பொருள் விபரங்கள் உட்பட்ட தகவல்கள் எதுவும் குறிப்பிடப்பட்டாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

விற்பனை நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.