விமான நிலையத்தில் 21வயது இளைஞன் கைது

துபாயிலிருந்து கட்டார் வழியாகத் திரும்பிய 21 வயதுடைய இலங்கையர் ஒருவர், ரூ.3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற நிலையில் விமான நிலைய பொலிசாரால் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனைகளை முடித்துவிட்டு விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேற முயன்றபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய காவல் பிரிவு அதிகாரிகளின் திடீர் சோதனைகளின் போது ,குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

அவரது பைகளில் இருந்து ஒருவகையான 20,000 சிகரெட் குச்சிகளையும், மற்றொரு வகையான 3,600 சிகரெட்டினையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனர் யட்டியந்தோட்டையைச் சேர்ந்தணர் என தெரியவருகின்றது.
விமான நிலைய காவல் நிலையப் பொறுப்பதிகாரி எல்மோ மால்கம் மற்றும் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.