விமானப்படை சிப்பாய் தற்கொலை
கொழும்பு-பம்பலப்பிட்டி பொன்சேகா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இலங்கை விமானப்படையின் சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் திருகோணமலை அபேபுர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய விமானப்படையைச் சேர்ந்த சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மேலும் பல விமானப்படை வீரர்களுடன் கடமையில் ஈடுபட்டிருந்த போது பொன்சேகா பிளேஸில் வீடொன்றிற்கு அருகில் தனது கடமை துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்