
விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட 13 வயது மாணவன்
அம்பலாங்கொடை பகுதியில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தரம் 7 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ஒருவரே இன்று காலை அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது மரணத்திற்கு மன உளைச்சல் தான் காரணம் என்று குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.