
விடுமுறைக்கு சென்ற 9 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
கம்பளையில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து 9 வயது சிறுவன் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் கம்பளை பிரதேசத்தை சோந்தவர்கள் எனவும் இவர்கள், கொழும்பில் வசித்து வருகின்ற நிலையில், விடுமுறைக்காக கம்பளை பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் சிறுவனின் தாய் கடைக்குச் சென்றுள்ளார். கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய தாய் சிறுவன் வீட்டில் இல்லாததை அவதானித்துள்ள நிலையில் பிரதேசவாசிகளின் உதவியுடன் சிறுவனை தேடிய போது சிறுவன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து இதற்கு முன்னரும் பெண் ஒருவரும் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
