
விஜயை தொடர்ந்து கட்சி ஆரம்பிக்கும் நடிகர்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் மற்றுமொரு நடிகரான விஷாலும் அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார்.
முன்னதாக அரசியல் பணிகளில் விஷால் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் நிலையில் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில், தனது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் நல இயக்கம்’ என்று பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார்.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார்.
விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார் என்றும், சட்டமன்ற தேர்தலில் விஷால் கட்சி போட்டியிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
