விகாரையொன்றின் கைப்பற்றப்பட்ட கோடா: தேரர் கைது

இரத்தினபுரி பகுதியில் உள்ள விகாரையொன்றின் அறையிலிருந்து 18,000 மில்லி லீட்டர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இமதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இமதுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் புதன் கிழமை குறித்த விகாரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 57 வயதுடைய தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோத மதுபானத்தை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இமதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்