
வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய நவராத்திரி விழா
-வாழைச்சேனை நிருபர்-
மட்டக்களப்பு பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
துர்க்கா, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளுடைய வழிபாடாக 9 நாட்கள் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்றன.
இறுதி நாளாகிய இன்று விஜயதசமியாகும். இன்றைய நாளில் அம்பிகை சூரனை வதம் செய்த நாளாகும்.
அந் நன்நாளில் கன்னி வாழை மரம் நாட்டி அதிலே அந்த சூரனை அம்பிகை ஆகாவனம் செய்து மகிஷா சூர பத்தினி எனப் பெயர் பெற்ற சூரனை அழித்த கைங்கரிய நிகழ்வு ஆலயத்தில் நடைபெற்றது.
அத்துடன் வித்தியாரம்பம் என கூறப்படுகின்ற ஏடு தொடக்கும் வைபவமாக மாணவச் செல்வங்கள் முதலாவது எழுத்தினை நெல் அரிசியில் எழுதி கல்வி கற்பதற்கு ஆரம்பம் செய்கின்ற நிகழ்வும் ஆலயத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுகளை ஆலய குரு சிவஸ்ரீ ககு.சிந்துகரன் சர்மா மற்றும் ஓய்வு பெற்ற அதிபர்.க.சதாசிவம் ஆகியோர்கள் கடவுளின் ஆசியுடன் நடைமுறைப்படுத்தினார்கள்.



