வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற சிங்கள மொழி தின விழா

-கிரான் நிருபர்-

சிங்கள மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை மதிக்கத்தக்க வகையில் நேற்று திங்கட்கிழமை வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் ‘சிங்கள மொழி தின விழா’ வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிங்கள மொழி ஆசிரியை திருமதி ஆர்.கிருபானந்தன் வழிகாட்டலில் கல்லூரி அதிபர் அ.ஜெயக்குமணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கௌரவ அதிதிகள் மலர்மாலை அணிவித்து சிங்கள மொழி பாடலுடன் கூடிய நடனத்துடன் வரவேற்கப்பட்டனர்.

அதிதிகளால் மங்கள விளக்கேற்றப்பட்டு இலங்கை நாட்டில் நால்வகை இனத்தகளின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான உடை அணிந்தவாறு மாணவர்களின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் சிங்கள மொழி பாடல், நடனம், பேச்சு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு அரங்க நிகழ்வுகள் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அ.ஜெயக்குமணன் சிங்கள மொழியின் மகத்துவம் தொடர்பாக உரையாற்றினார்.

நிகழ்வில் அதிதிகளாக எம்.ஜே.எவ்.அமைப்பின் முகாமையாளர் எம்.எஸ்.சபிக்கா, கல்லூரி அபிவிருத்தி சங்க செலாளார் தெ.உதயகுமார் உட்பட இந்துக் கல்லூரி மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.