வாள், கோடரியுடன் நடந்து சென்ற இளைஞன்

யாழ். கட்டுடை பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய வாள் மற்றும் கோடரியுடன் நடந்து சென்ற இளைஞரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வன்முறை செயலுக்காக இவ்வாறு சென்றிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளயிட்டுள்ள நிலையில் இளைஞருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.