
வாள், ஐஸ், கஞ்சாவுடன் இளைஞன் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வாள் மற்றும் போதை பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.
மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் நேற்று கைது செய்ய போது அவரிடம் இருந்து இரண்டு வாள்கள் மற்றும் பொதி செய்யப்பட்ட கஞ்சா பொதிகள் நான்கும், ஐஸ் போதைப்பொருள் 600 மில்லிக்கிராம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் விசாரணையின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
