வாகரை கதிரவெளியில் சிறுவர் முதியோர் தின நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்-

சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று வாகரை பிரதேசத்தின் கதிரவெளி விக்னேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயத்தில் அதிபர் பொன்.இராமச்சந்திரன் தலைமையில், பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

அதிதிகள் மற்றும் மாணவர்கள் மலர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து கலை நிகழ்சிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.

இதேவேளை 75 வயதை தாண்டிய கதிரவெளி, புதூர், புச்சாக்கேனி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 15 முதியவர்களை அவர்களின் இல்லத்திற்கு சென்று மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவுப் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் முன்னாள் வாகரை பிரதேச சபை தவிசாளர் சி.கோணலிங்கம், ஆசிரியர்கள் சிலிங்கோ நிறுவனத்தினர், வாகரை பொலிசாரும், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

வாகரை கதிரவெளியில் சிறுவர் முதியோர் தின நிகழ்வு வாகரை கதிரவெளியில் சிறுவர் முதியோர் தின நிகழ்வு வாகரை கதிரவெளியில் சிறுவர் முதியோர் தின நிகழ்வு வாகரை கதிரவெளியில் சிறுவர் முதியோர் தின நிகழ்வு