பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களையும் மையமாகக் கொண்டு 2025 செப்டெம்பர் மறுமலர்ச்சி நகரம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு நேற்று ஞாயிற்றக்கிழமை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையில் தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் அவர்களின் தலைமையில் கோறளைப்பற்று வடக்கு மத்திய கலாச்சார நிலையத்தில் இடம்பெற்றது.
வாகரை பிரதேசத்தில் கடந்த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் கடந்த சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவி, ஐந்தாம் தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், கூத்து போட்டியில் தேசிய மட்டத்தில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பதக்கம் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படதுடன்
மேலும் உள்ளூராட்சி வாரத்தில் நடத்தப்பட்ட மாணவர்கள் சார்ந்த பல்வேறு போட்டி நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய கோறளைப்பற்று வடக்கு வாகரை தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார் …
எமது பிரதேசத்தில் ஆட்சி செய்வதற்கு போதிய அளவு கல்வி மான்கள் இல்லாமல் அவதிப்பட்டுள்ளோம் இங்கு இல்லாத காரணத்தால் வெளியில் இருந்து வந்து இங்கு கடமை செய்கின்றார்கள் அவர்களைப் பாராட்டுகின்றோம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் இந் நிலை மாற வேண்டும் இந் நிலையினை மாற்ற வேண்டிய பொறுப்பு மாணவர்களாகிய உங்கள் கைகளில்தான் தங்கி உள்ளது நீங்கள் சாதனையாளராக மாற வேண்டும் பல சாதனைள் படைக்க வேண்டும் இப் பிரதேசம் சிறந்த கல்வி மான்களை கொண்ட பிரதேசமாக மாற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் க.அமலினி, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் MRF. றிப்கா ஷபின் மற்றும் பிரதேச சவை செயலாளர், சபையின் உப தவிசாளர் ச.ரசிகரன் பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், வாகரை இராணுவப் பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி, பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் .