வாகன விபத்து: 8 பேர் படுகாயம்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

அவிசாலையிலிருந்து திருகோணமலைக்கு வேனில் சுற்றுலா வந்தவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்ற வேளை, திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் வைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் பின்னால் அவர்களின் வேன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் வேனில் பயணித்த அவிசாவலையைச் சேர்ந்த வேன் சாரதி உட்பட 7 பேர் படுகாயந்துள்ளதுடன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் உதவியாளரும் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்