
வாகன விபத்து: மூவர் மரணம்
குருநாகல் நாரம்மல பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியும் பாரவூர்தியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்த நிலையில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
