
வாகன விபத்தில் ஒருவர் பலி
புத்தளம் – அநுராதபுரம் ஏ-12 வீதியில் பண்டுலுகம பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம், பண்டுலுகம பகுதியைச் சேர்ந்த கே.எம்.சமிந்த லால் ( வயது – 43) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்துச் தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
