வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு லேசர் இயந்திரத் தொகுதி கையளிப்பு

-மஸ்கெலியா நிருபர்-
வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் ஊடாக 48.4 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த கண் சிகிச்சைக்கான லேசர் இயந்திரத் தொகுதிகள் கையளிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கந்தையா விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தகவல் தருகையில்,

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு ஆர்கன் ( ARGON ) மற்றும் ( YAG ) ஆகிய புதிய இயந்திரத் தொகுதிகள் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் நிலக்சன் கண் வைத்திய சத்திர சிகிச்சை ஆலோசகர் வைத்தியர் கிரிதரன் உள்ளிட்ட குழுவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இயந்திரங்களின் ஊடாக நோயை இனங்காணுதல், சிகிசையளைதல் போன்றவற்றை இலகுவாக மேற்கொள்ள முடியும். குறிப்பாக நீரிழிவு, மற்றும் பிற நோய்களால் கண் பார்வை இலக்கக் கூடிய நோயாளிகளை பூரணமாகக் குணப்படுத்த பேருதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக மருத்துவ நல அமைப்பானது ( INTERNATIONAL MEDICAL HEALTH ORGANIZATION ) பல நாடுகளில் தொண்டு நிறுவனமாக செயற்பட்டு வருவதோடு, இலங்கையில் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.

வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் ஊடாக 48.4 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த கண் சிகிச்சைக்கான லேசர் இயந்திரத் தொகுதிகள் கையளிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் திட்டப் பணிப்பாளர் கந்தையா விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.