வவுனியா பாடசாலைக்கு 3 இலட்சம் பெறுமதியான அன்பளிப்பு வழங்கிய புலம்பெயர் தமிழ் இளைஞன்

-வவுனியா நிருபர்-

வவுனியா நகரில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் (V/CCTMS)  இன்று வெள்ளிக்கிழமை காலை பிரார்த்தனையின்போது ரூபா 3 இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலை சீருடை துணிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது

இந்நிகழ்வானது பாடசாலையின் முதல்வர் அரிபூரணநாதன் தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த வருடம் புலமை பரிசில் எழுதிய 44மாணவர்களுக்கான பாதணிகள், புத்தக பை,  மற்றும் தேவையுடைய மாணவர்களுக்கான சீருடை துணிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது

பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் வேண்டுகோளுக்கு இணங்க, சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் புலம் பெயர் தமிழ் இளைஞனான பரமலிங்கம் வினிஷ் என்பவரது தனிப்பட்ட நிதி பங்களிப்பில் குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்