வவுனியாவில் வாக்குச்சீட்டை பொதுவெளியில் பகிர்ந்த அரசியல் பிரமுகர்
-வவுனியா நிருபர்-
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பிற்கான வவுனியா மாவட்ட நிதிப்பொறுப்பாளருமான ஒரு அரசியல் பிரமுகர் தனது முகநூலில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டை பொதுவேட்பாளருக்கு புள்ளடி இடப்பட்டவாறு பகிர்ந்துள்ளார்.
இரண்டாவது நாளாக நேற்றைய தினம் வியாழக்கிழமை தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நபர் வாக்குச்சீட்டை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ள செயல்பாடு என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த சமூக வலைத்தள பதிவிற்கு எதிராக வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவிடமும், தேர்தல் கண்காணிப்பு குழுக்களிடமும் முறைப்பாடு பதிவிசெய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
