வருமான வரி செலுத்தும் வரி செலுத்துநர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. வரி செலுத்தும் போது உரிய வரி வகை, மதிப்பீட்டு காலம் மற்றும் செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றை சரியாகக் குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவறான தகவல்களுடன் அல்லது தவறான வரிக் கணக்கின் கீழ் பணம் செலுத்தப்பட்டால், அந்தத் தொகையை உரிய கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். எனவே, வரி செலுத்துவதற்கு முன்பாக அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, உரிய முறையில் பணம் செலுத்துமாறு வரி செலுத்துநர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வரி செலுத்தியதற்கான ரசீது மற்றும் தொடர்புடைய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.









