
வருடாந்த வர்த்தக கண்காட்சி
-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த வர்த்தக கண்காட்சி இன்று திங்கட்கிழமை பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.
இதன் போது மூவர் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் கைத்தொழில் பொருட்களின் கண்காட்சியின் விற்பனையும் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மேலதிக மாவட்ட செயலாளரும் (காணி), மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான எஸ். சுதாகரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், தலைமை சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


