வருடத்தின் முதல் நாளே தமது கடமையை செய்ய தவறிய பிரதே சபை!

மட்டக்களப்பு- கல்குடா பாசிக்குடா முனை முருகன் ஆலயத்தில் 2026 ஆம் ஆண்டு வருட பிறப்பினை முன்னிட்டு வழிபாடுகளுக்கு சென்ற மக்கள் தண்ணீர் இன்றி சிரமப்பட்டதாக தெரிய வருகின்றது.

குறித்த ஆலயத்திற்கு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையே தண்ணீர் வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்ணீர் வசதியினை செய்து கொடுக்க பிரதேச சபை தவறி விட்டதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.