வரி வருமான வசூல் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டிற்கான வரி வருமானம் 42.22 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 2,620.07 பில்லியன் ரூபாய் வரி வருமான வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆண்டுக்கான இலக்கில் 96 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட பொருளாதார செயல்திறன் மற்றும் திறமையான வரி நிர்வாகம் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 4.3 ட்ரில்லியனாக உயர்ந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டை விட 32.21 சதவீதம் அதிகமாகும் எனவும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.