
வரிசையுகங்களை முடிவுக்கு கொண்டு வந்த மாபெரும் தலைவரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என எஸ். சுதர்சனன் தெரிவித்துள்ளார்.
பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் எஸ். சுதர்சனன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை வரிசை யுகங்களில் இருந்து மீட்ட, நேர்மையான, அதிசிறப்பான தலைமைத்துவத்தினாலே பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குகின்றனர் என கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
