வரவு -செலவுத் திட்டம் – இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதம் இன்று
2026 ஆம் ஆண்டுக்கான, வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதம் இன்று இடம்பெறுகிறது .
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு முன்னெடுக்கப்படுகிறது .
2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இதேநேரம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகி, 6 ஆவது நாளாக இன்றும் இடம்பெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம், நாளை 15 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெற்று, அன்று மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
