வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான திருமஞ்சத்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழைஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹாஹோற்சவத்தின் திருமஞ்சத்திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

கருவரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ துர்க்காதேவிக்கு, விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களுக்கான விஷேட அபிஷேசக, ஆராதனைகள் என்பன இடம்பெற்று, வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளி பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம்வந்து திருமஞ்சத்மனையில் வீற்று வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.