வரலாற்று சாதனை படைத்த சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்

கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா – 2023 தேசிய மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பயிற்சி பெற்றுவரும் மாணவர் குழுவினர்கள் கிழக்கு மாகாணத்தில் முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றதுடன் கனிஷ்ட நடன நிகழ்ச்சியான ரபான், கோலாட்டம் போட்டியிலும், சிரேஷ்ட நிகழ்ச்சியான கோலாட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளில் கனிஷ்ட பிரிவு போட்டியில் ரபான் கோலாட்டம் குழுவினர் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினைபெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளர்கள்.

தேசிய போட்டிகள் பொல்கொல்ல மகாவலி கல்விக் கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதில் சிரேஷ்ட நிகழ்ச்சி கோலாட்டம் நடனகுழுவினர் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். அதேபோல் சித்திரம் வரைதல் தேசிய மட்டத்தில் எம்.எல்.எப். ஜியா மூன்றாம் இடத்தினையும் ஜெ.றின்சான் ஆறுதல் பரிசினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்