
வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழத்து சபரிமலை ஐயப்பனின் தீர்த்தோற்சவம்
-யாழ் நிருபர்-
வரலாற்றுச் சிறப்புமிக்க கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன் தேவஸ்தானத்தின் 10ஆம் நாள் தீர்த்தோற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இவ்வாலயத்தின் வருடாந்த கொடியேற்றம் 06.12.2023 அன்று இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிக்கும் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன், மடசாமிக்கும், கருப்பானசாமி ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றன.
பின்னர் வசந்த மண்டபத்தில் அருள் பாலித்து விளங்கும் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பனுக்கு தீபாராதனைகள் இடம்பெற்று, அங்கிருந்து எழுந்தருளிய எம்பெருமான் பீடத்தில் வீற்றிருந்து உள்வீதியுடாகவும், வெளி வீதியூடாகவும் வந்து தீர்த்தமாடினார்.
ஆலயபிரதம குரு குருமாமணி கி.ஹரிஹரசுதச் சிவாச்சாரியரினால் கிரியைகள் நடாத்தி வைக்கப்பட்டன.


