
வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதம்பிரான் ஆலய கப்பல் திருவிழா
-யாழ் நிருபர்-
வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயதின் சிறப்புத் திருவிழாவான கப்பல் திருவிழா நேற்றிரவு சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு 11 கூட்டு தவில் நாதஸ்வர இசை நிகழ்வும்இ அதனை தொடர்ந்து இந்திய இறையிசை பாடகி நித்திய சிறி மகாதேவனது இறையிசை பாடல் கச்சேரியும் இடம் பெற்றதை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்று நான்கு மணியளவில் கப்பலாட்டும் நிகழ்ச்சி இடம் பெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


