இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்று வரும் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கா, முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட இறுக்கம் மற்றும் தசைப்பிடிப்பு காரணமாக தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி நாடு திரும்பவுள்ளார்.
இந்த உடல்நலப் பிரச்சினை காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியிலும் ஹசரங்கா விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் இணைக்கப்பட்ட சச்சிந்து கொலம்பகே, தனது அறிமுக ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்.
ஹசரங்காவின் உடல்நிலை தொடர்பான முழுமையான விபரங்கள் தற்போது வெளியாகாத நிலையில், அவரை மேலும் போட்டிகளில் விளையாட வைத்து ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம் என அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பிய பின்னர் ஓய்வு மற்றும் சிகிச்சையைப் பெற்று, ஒக்டோபரில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் தொடருக்குத் தயாராக அவர் எதிர்பார்க்கப்படுகிறார்.









