வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்ஷவப் பெருவிழா
மட்டக்களப்பு – வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்ஷவப் பெருவிழா நாளை சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இவ்வாறு ஆரம்பமாகும் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்ஷவப் பெருவிழா எதிர் வரும் 10ஆம் திகதி களுவன்கேணி இந்துமா சமுத்திரத்தில் தீர்த்தோற்ஷவத்துடன் நிறைவடையவுள்ளது.
அடியார்கள் பக்தி சிரத்தையோடு ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து எல்லாம் வல்ல மஹா விஷ்ணுப் பெருமானின் திவ்விய திருவருள் பெற்றுச் செல்லுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.