வந்தாறுமூலையில் இரத்ததான நிகழ்வு
உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இளையதம்பி சிறிநாத் பரிந்துரையின் அடிப்படையில் வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இளையதம்பி சிறிநாத்தின் பிரதான காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது இளைஞர்கள் யுவதிகள் எனப் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானத்தை வழங்கிவைத்திருந்தனர்.
போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர் குழாம் வருகைதந்து இவ்வுதிரங்களை சேகரித்துக் கொண்டதுடன் நியூ பயணியர் தனியார் வைத்தியசாலை ஊழியர்களால் இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக இரத்தப் பரிசோதனை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.