
வட கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகள் பெறக்கூடியவரை களமிறக்க வேண்டும்: ஞானமுத்து ஸ்ரீநேசன்
வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ள, வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள அவர இல்லத்தில் நேற்று முன் தினம் செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்த்தலில் தமிழ் மக்கள் சரியாகவும் நிதானமாகவும் முடிவெடுக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் சமூகமும், புத்திஜீவிகளும், இத்தேர்தலை எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்கின்றார்கள். இந்நிலையில் தமிழ் தேசிகள் கட்சிகள் இத்தேர்தலை எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்பதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மக்களின் மக்கள் ஆணையைப் பெறவேண்டும். அதற்கான தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தெரிவித்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் பொதுவேட்பாளராக களமிறங்கினால் என்ன என்ற கேள்ளி கேட்க்கப்படுகின்றது. இது தொடர்பில் வடக்கு கிழக்கிலுள்ள பலரும் ஆர்வம் காட்டிவருகின்றார்கள். எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக போட்டியிடச் செய்து அதன்மூலம் வடக்கு கிழக்கு மக்களின் மக்கள் ஆணையை சர்வதேசத்திடம் தமிழ பேசும் மக்கள் உரத்த குரலில் கூறுவதற்குரிய சந்தர்ப்பமாக பயன்படுத்தினால் என்ன என்ற கேள்வி எழுகின்றது.
எமது வேட்பாளர் வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ளவதராக இருக்க வேண்டும். எனவே வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஆளுமையுள்ள ஒருவரைகளமிறக்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
