
வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் காலமானார்
-யாழ் நிருபர்-
வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் சிவானந்தராசா சிவனேசன் (றாயூ) இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.
திடீரென சுகயீனமுற்ற நிலையில் இன்று காலை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற வழியில் காலமானார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
