வடக்கு ரயில் சேவையின் பயண நேரத்தில் மாற்றம்

வடக்கு மார்க்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் ரயில் சேவையின் பயண நேரத்தில் இன்று திங்கட்கிழமை முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கல்கிஸ்ஸ முதல் காங்கேசன்துறை வரை, வார இறுதி நாட்களில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வந்த சொகுசு கடுகதி ரயில் சேவையானது, இன்று முதல் நாளாந்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடும் யாழ்தேவி ரயில் சேவையின் நேரத்திலும், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.