வடகொரியா வரலாறு
💢கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (அல்லது பொதுவாக வட கொரியா) கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. 1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. இரண்டாம் உலகப் போரின் பின் 1945இ ஆகஸ்டு 15 இல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றது. எனினும் இன்னமும் இவ்விரு நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்னை நிலவுகிறது. 1.21 மில்லியன் வீரர்களுடன் சீனாஇ அமெரிக்கா இ மற்றும் இந்தியா விற்கு அடுத்து உலகில் 4 ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது.இது ஒரு அணு ஆயுத நாடாகவும் மற்றும் விண்வெளி ஆய்விலும் முழுக் கவனம் செலுத்தி வருகிறது.
🔯கி.மு. 2333 ல் கொஜோசியோன் டாங் மூலம் முதல் கொரிய அரசு நிறுவப்பட்டது. வடக்கு கொரிய தீபகற்பம் மற்றும் மஞ்சூரியா பகுதிகள் வரை விரிவடைந்தது.இதைப் பற்றிய குறிப்புகள் கி.மு. 7 ஆம் நூற்றாண்டுகளில் சீன வரலாற்றுக் குறிப்புகளில் கூறப்படுகிறது.
சீன ஹன் பாரம்பரியத்துடன் ஏற்பட்ட பல மோதல்களை அடுத்து கொஜோசியோன் அரசு சிதைந்தது.கொரியா வடக்கில் கோகுர்யோ, மற்றும் பெக்ஜ் மற்றும் தெற்கில் சில்லா ஆகிய மூன்று அரசுகளாகப் பிரிவடைந்தது. 372 ல் கோகுர்யோ அரசின் அதிகாரப்பூர்வ மதமாகப் புத்த மதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
🔯கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் சீனாவுடன் பல யுத்தங்கள் மற்றும் சீன படையெடுப்புகள் மூலம் சிறந்த நிலையை அடைந்தது. 7 ஆம் நூற்றாண்டில் உள்நாட்டு வாரிசுப் போர்களால் வீழ்ச்சியடைந்தது. 676 ல் ஒருங்கிணைந்த சில்லா நாட்டின் ஆட்சியின் கீழ் மற்ற நாடுகள் ஒன்றிணைக்கப்பட்டது.இக்காலத்தில் கொரியா மற்றும் சீனா இடையில் மிகவும் அமைதியான உறவு இருந்தது. இது 7-10 வது நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் வரை நீடித்தது.
🔯13 ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்பு மூலம் இது மிகவும் பாதிக்கப்பட்டது.1388 ல் மங்கோலியப் பேரரசு வீழ்ச்சிக்குப் பின்னர் ஜோசியான் வம்சம் நிலைபெற்றது.
1394 ல் ஜோசியான் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை அரசியல் பிரச்சனைகளைத் தொடர்ந்து இதன் தலைநகரம் தெற்கு ஹான்யாங்கிற்கு (தற்கால சியோல்) மாற்றப்பட்டது.
1592–1598 வரையிலான காலகட்டத்தில் கொரியாவை கைப்பற்றும் எண்ணத்தில் இரண்டு முறை ஜப்பான் படையெடுபை முறியடித்தது.
🔯17-19 நூற்றாண்டுகளில் சீனாவின் சார்ந்த தன்னிச்சையான நாடாக மாறியது.
1871 இல் காங்வா தீவில் அமெரிக்கப் படைகளுடன் ஏற்பட்டபோரில் 243 கொரிய வீரர்கள் கொல்லப்பட்ட பின் கொரியா ஜப்பான் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
1910 ல் ஜப்பான் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொரியா வந்தது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் சரணடைந்ததை அடுத்து ஜப்பானிய ஆட்சி முடிவுக்கு வந்தது
1948 ல் வட மற்றும் தென் கொரியாக்கள் பிரிக்கப்பட்டன. 1950 ல் கொரிய போர் ஏற்பட்டது 1953 ஆம் ஆண்டு ஒரு போர் நிறுத்த சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது.
1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையில் இவ்விரு நாடுகளுக்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
🔯கிம் ஜங்-ஊன் ஜனவரி 8இ 1983 அல்லது 1984ஆம் ஆண்டு பிறந்தார். மறைந்த வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லின் மூன்றாவது மற்றும் கடைசி மகனாவார்.2010ஆம் ஆண்டின் கடைசிக்காலங்களில் இருந்துஇ நாட்டுத் தலைமையை ஏற்க தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த வாரிசும் ஆவார். அவரது தந்தையாரின் மறைவிற்குப் பின்னர் பெரும் அடுத்த தலைவராக வட கொரியத் தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டவரும் ஆவார்.
🔯வட கொரிய இராணுவத்தில் டீஜங் எனப்படும் ஜெனரல் நிலைக்கு இணையான பதவியில் உள்ளார் கிம் வட கொரியாவில் கணினி பொறியியல் படித்துள்ளதாகத் தெரிகிறது. கிம் இல் சுங் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றுள்ள கிம் ஜொங்-உன் கிம் இல் சுங் இராணுவ அகாதமியிலும் பிறிதொரு பட்டம் பெற்றுள்ளார்.
வடகொரியா வரலாறு
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்