வடகிழக்கு பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு : திருகோணமலையில் துண்டுப் பிரசுரம் விநியோகம்!

-கிண்ணியா நிருபர்-

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்து திருகோணமலை நகரிலும் துண்டுப்பிரசுர விநியோகம் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது.

இதனை இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை இளைஞர் அணி ஏற்பாடு செய்து துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக குறித்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.