வங்கியில் வைப்பிலிட நிறுவனம் வழங்கிய 50 இலட்சம் ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற ஊழியர்
வங்கியில் வைப்பிலிடுவதற்காக நிறுவனம் வழங்கிய ஐம்பது இலட்சம் ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற ஊழியரைக் கண்டுபிடிக்க அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த ஊழியர் தான் பணிபுரியும் நிறுவனம் வைப்பிலிட வழங்கிய பணத்துடன் அவிசாவளை பகுதியிலுள்ள வங்கியொன்றுக்கு சென்றுள்ளார்.
பின்னர் வாகனத்தை வங்கிக்கு முன்பாக நிறுத்திவிட்டு அங்கிருந்து பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பணத்துடன் தப்பிச் சென்ற சந்தேகநபர் புத்தல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்