வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்ததன் பின்னர் தொடர்ந்து வலுவடைகிறது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 286.12 முதல் ரூ. 282.22 ஆகவும் விற்பனை விகிதம் ரூ.301.50 முதல் ரூ. 297.40.ஆகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 285.81 முதல் ரூ.283.07 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 298 முதல் ரூ. 296 ஆகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 289 முதல் ரூ. 284 ஆகவும் விற்பனை விலை ரூ. 301 முதல் ரூ. 296 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்