வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 309.46 ஆகவும் மற்றும் விற்பனை பெறுமதி 327.13 ஆகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 310.55 முதல் ரூ. 308.75 ஆகவும், விற்பனை விலை ரூ. 325 முதல் ரூ. 324 ஆகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியில் ,  அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 310 முதல் ரூ. 309  ஆகவும் விற்பனை விகிதம் 324.ஆகவும் பதிவாகியுள்ளது.

  

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்