லீப் ஆண்டு பற்றிய அறியப்படாத தகவல்கள்

 

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டு என்ற இயற்கை நிகழ்வு நடைபெறுகிறது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு 366 நாட்களை கொண்டு லீப் ஆண்டாக அமைந்துள்ளது.

பூமி அதன் சொந்த சுற்றுப்பாதையில் பயணிக்க 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடங்கள் மற்றும் 45 வினாடிகள் ஆகின்றது. ஆனால் லீப் ஆண்டில் பூமி இந்த ஒத்திசைவிலிருந்து வெளியேறும்.

இதேவேளை ரோமானிய சர்வாதிகாரி ஜூலியஸ் சீசர் கி.மு. 45 இல் ஜூலியன் நாட்காட்டிக்கான லீப் நாள் கருத்தை நிறுவினார்.

இருப்பினும், இது பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு பதிலாக பெப்ரவரி 24 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், ஜூலியன் நாட்காட்டியில் பெப்ரவரி 24 ஆம் திகதியே அந்த மாதத்தின் கடைசி மாதமாகும்.

முந்தைய காலங்களில், லீப் தினம் ஆண்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் நாளாக இருந்துள்ளது. இருப்பினும் பின்னாட்களில் இது போன்ற கொண்டாட்டங்கள் தொடரவில்லை

லீப் நாளில் பிறக்கும் குழந்தைகளை லீப்ளிங்ஸ் அல்லது லீப் இயர் குழந்தைகள் என்று குறிப்பிடுகிறார்கள்.

அவர்கள் வழக்கமாக தங்கள் பிறந்த நாளை பெப்ரவரி 28 அல்லது மார்ச் 1ஆம் திகதிகளில் லீப் அல்லாத ஆண்டுகளில் கொண்டாடுகிறார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்