றீமால் சூறாவளி குறித்த எச்சரிக்கை

றீமால் சூறாவளியின் தாக்கம் இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்