ருமேனியா வேலை வாய்ப்பு மோசடி : 24 வயது இளைஞர் கைது

ருமேனியாவில் வேலை பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடி செய்த 24 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தலம, கருங்கலே வீதிக்கு அருகில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்