ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது உகண்டா
கயானா ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற சி குழுவுக்கான 9ஆவது ரி20 உலகக் கிண்ண போட்டியில் பப்புவா நியூ கினியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தி உகண்டா வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பப்புவா நியூ கினி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றது.
78 ஓட்டங்கள் என்ற எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகண்டா, சிரமத்திற்கு மத்தியில் 18.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட மிகக் குறைந்த இணை மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கையும் 77 ஓட்டங்களையே பெற்றிருந்தது.
ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்த வருடம் அறிமுகமான உகண்டா, இதன் மூலம் தனது முதலாவது உலகக் கிண்ண வெற்றியைப் பதிவு செய்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்