ரி.எம்.வி.பி கட்சியின் மகளிர்தின நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு , மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட  ‘தாயாக கரம் கொடுப்போம்’ எனும் தொனிப்பொருளிலான மகளிர் தின நிகழ்வானது நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்திருந்து நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு பேரணி ஆரம்பமாகி பிற்பகல் 3:00 மணிக்கு தேவநாயகம் மண்டபத்தை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி பெண்கள் சம்மந்தமாக பல்வேறு நிகழ்சிகள் இடம்பெற்றன.