ராவண எல்ல வனப் பகுதியில் காட்டு தீ

-பதுளை நிருபர்-

எல்ல பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட ராவண எல்ல வனப் பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.45 மணியிலிருந்து காட்டு தீ பரவிவருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டு தீயினால் உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும் இதுவரை பத்து ஏக்கர் வரை எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.